
DLF தொழிற் பூங்கா.
சிமெண்டு பெஞ்சில் வந்தமர்ந்த மீராவின் தரிசனம் பெறக் காத்திருந்தது போலவே ஆஜரானது அந்த சிகப்புப் பறவை.
“ஏய் , ஸ்கார்லெட், இன்னைக்கு நீயும் , நானும் மேட்சிங், மேட்சிங்”,கையசைத்துப் பறக்கும் முத்தம் அனுப்பி வைத்தாள்.
மீரா அவள் உடல்வாகுக்குப் பொருத்தமான சிகப்பு நிற டாப் மற்றும் ஸ்கர்ட் அணிந்திருந்தாள். கூடவே, பொருத்தமான அணிகலன்களோடு பார்க்க அம்சமாக இருந்தாள்.
அவள் கையில் ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பு.
தோழியைத் தேடி வந்த சுருதி, “ஏண்டி ஒண்ணுமே நடக்காதது போல ஜாலியா இருக்கே”.
“கண்ணனை நம்பி கர்ப்பத்தை வயிற்றில் வாங்கிட. அவன்கிட்டேயிருந்து எந்தத் தகவலும் இல்லை. பேசாமல் என்னோட ஆஸ்பிட்டல் வா, கலைச்சுடலாம்”.
“சுருதி, கண்ணன் ஏதோ சிக்கல்ல இருக்கான்னு நினைக்கிறேன். என் உள் மனசு சொல்லிது, அவன் ஏமாத்த மாட்டான்னு”.
“அப்படியே அவன் வராமல் போனாலும், இந்தக் குழந்தையை அநாதையான எனக்குக் கிடைத்த உறவா நினைச்சுக்கிறேன்”.
தன் ஊருக்குச் சென்று திரும்பும்போது நடந்த விபத்தில் சுயநினைவை இழந்திருந்தான் கண்ணன்.
இங்கே அவள் தினமும் பூங்காவில் தன் கண்ணனை எதிர்நோக்கிக் காத்திருந்தாள்.
கதையின் முடிவைப் படித்து முடித்த மீராவின் விழிகள் தன்னிச்சையாக நீர் சொரிய, அவள் தலையில் செல்லமாகத் தட்டிப் பறந்துவிட்டது ஸ்கார்லெட்.
வார்த்தைகள்: 133
