கஸ்தூரி குருசாமி/தனிமை

வெண்ணிலா தனிமையில் உட்கார்ந்து தன் எதிர்காலத்தைக் குறித்து யோசித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். இப்போதும் ஒரு வரனின் புகைப்படம் அனுப்பி உள்ளனர். ஆனால் அவள் நவ நாகரிக மங்கை. திருமணமான பின் எந்த கட்டுப்பாடுமின்றி வாழ அனுமதிக்கும் வரனை த் தான் எதிர்பார்க்கிறாள். அவள் காதலித்த திலிப் ரொம்பவும் நவீனம்.அவளோடு ஊர் சுற்றவும் உணவகத்தில்  சாப்பிடவும் சிறுசிறு சரசங்கள் செய்வதுமாக நாட்கள் சென்றன. எப்போது திருமணம் என்ற பேச்சு வந்ததோ அப்போது” என் அப்பா அம்மா குடும்பப்பாங்கான பெண்ணை தான் விரும்புகிறார்கள். எனக்கும் அதான் ஆசை “எனக் கூறி பிரிந்து விட்டான்.பொழுதுபோக்காகக் காதலித்தான் என்பது அப்போதுதான் அவள் உணர்ந்தாள்.அவள் சோகத்தில் உட்கார்ந்து இருக்கும் போது ஒரு பறவை அவள் அருகில் வந்தது.கோபத்தில் விரட்டினாள்.ஆனால் அது அவளையே பார்த்த வண்ணம் அவள் அருகிலேயே இருந்தது. நீயாவது எனக்கு ஆறுதலாக இருப்பாயா? எனக் கேட்க கீ கீ என்றது.

101

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன