
‘கமலி’ அந்தப் பெயருக்கு ஏற்றார் போல் அவளது முகம் சிவந்த தாமரை போல் அழகாக இருக்கும். அவளுக்குச் சிவப்பு நிறம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்றும் சிவப்பு நிற ஆடை உடுத்தி வீட்டின் பக்கத்தில் உள்ள, பூங்கா அமர்வில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். மாலை வேலையில் பலவிதமான பறவைகள் அங்குள்ள மரங்களில் வந்து உட்காரும். அதுபோல் அன்றும் சிவப்பு நிற புதிய பறவை ஒன்று வந்து அவள் அருகில் அமர்ந்தது. அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது .அதைப் பிடிக்கச் சென்றாள். அது பறந்து விட்டது. மிகுந்த கவலையுடன் வீட்டிற்குச் சென்றாள். அந்த சிவப்பு நிற கிளியைப் பற்றி தன் காதலனிடம் கூறினாள்.அவனும் “ஓ..அப்படியா “என்று கேட்டுக் கொண்டான். மறுநாளும் அதே நேரத்தில் அந்த பறவை வந்தது. மனதில் மகிழ்ச்சி. ஆனால் அதைப் பிடிக்க முயற்சி செய்யவில்லை. சிறிது நேரம் கழித்து வீட்டிற்குச் சென்று விட்டாள். அடுத்த நாள் அவளுக்குப் பிறந்தநாள் .அவளது காதலன் பரிசுடன் அவளைப் பார்க்க வந்தான். வாசலில் வந்து பார்த்தாள் கமலி. வீட்டுத் திண்ணையில் கூண்டுக்குள் அந்த சிவப்பு கிளி. மனதிற்குப் பிடித்த பரிசு கிடைத்ததில் கமலிக்கு மிகுந்த சந்தோஷம்.
125

அருமை
அசத்தீட்டிங்க மேடம்