சுவாமி நாதன்/அடையாள அட்டை

இன்று காலை பள்ளி கிளம்பும் போது திடீரென்று ‘அம்மா, என் பள்ளி அடையாள அட்டையைக் காணோம். நவீன் வீட்ல குளிக்கும் போது எங்கேயோ கழட்டி வெச்சுட்டேன் போல இருக்கு. தயவு செஞ்சு தேவி நவீன் போகும் போது கொஞ்சம் தேடிப் பார்க்கச் சொல்லு. இல்லைன்னா போர்டு பரிட்சை எழுத விட மாட்டாங்க.’ என்றான்.
‘நல்லா தேடிப் பார்த்தியாடா?’
‘நல்லாத்தான் பார்த்தேன். கிடைக்கல.’
‘சரி, போன வருஷம் கார்டை வெச்சு இன்னைக்கு சமாளி. பார்க்கலாம்.’
பின்னர் அவள் தேவியிடம் சொல்ல அவள் வாஷிங் மெஷின் உட்பட பல இடங்களில் தேடினாள். துணிகளை உதறிப் பார்த்தாள்.
‘கிடைக்கலேம்மா. அரை மணி எல்லா ரூம்லயும் தேடினேன்.’
‘சாயங்காலம் போகும் போது மறுபடியும் தேடு. சிரிஷ்டி கணபதி கிட்ட வேண்டிக்க. அம்மா அவரை லக்கி கணபதிம்பா.’அம்மா, கணபதியும் நீங்களும் பார்த்து எடுத்துக் கொடுங்க ‘ ன்னு பிரார்த்தனை பண்ணு. 10 ரூபாய் உண்டியில் போடறேன். எடுத்துக் குடுங்கன்னு சொல்லு
‘சரிம்மா சாயங்காலம் மறுபடியும் போறேன்.’
சித்தார்த் சில நிமிடங்களில் ஓடி வந்தான்.
‘அம்மா. கிடைச்சுப் போச்சு. இங்கேயே தான் இருந்தது.’
‘பாரேன். சிரிஷ்டி கணபதி லக்கி கணபதின்னு அம்மா சரியாதான் சொல்லியிருக்கா.’
நான் சொன்னேன். ‘ஏய் தேவி, இது சிரிஷ்டி கணபதி பேரைச் சொன்னதால் நடந்தது. அவர் ஒரு வரப்ரசாதி. அதனால் வேண்டினேயோ இல்லையோ உண்டியில் பணம் போட்டுடு.’
‘சரிப்பா.’

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன