
பழமைவாதக் குடும்பத்தில் பிறந்த மல்லிகாவுக்கு, சட்டம் படிக்க வேண்டும் என்பதுதான் அடங்காத ஆசை. ஆனால், “பெண்களுக்கு எதுக்குடி சட்டப் படிப்பு? படித்தது போதும்” என்ற பெற்றோரின் சொற்களால் அவள் சிறகுகள் தினமும் வெட்டப்பட்டன.
ஒரு மாலை வேளையில், வீட்டின் திண்ணையில் அமர்ந்து, யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்த சட்டப் புத்தகத்தை ஆசையோடு வருடிக்கொண்டிருந்தாள்.
அப்போது, அவளுக்கு நேரே ஒரு செவ்வண்ணப் பறவை வந்து அமர்ந்தது. அது கூண்டுகளற்ற வானில் சுதந்திரமாகச் சிறகடித்துப் பறப்பதை மல்லிகா ஏக்கமாகப் பார்த்தாள்.
“உணக்கிருக்கும் சுதந்திரம் கூட எனக்கு இல்லையே…” என்று மனதுக்குள் ஆதங்கப்பட்டாள்.
அந்தப் பறவையின் கூர்மையான பார்வையும், அதன் சுதந்திரமான நிமிர்வும் அவளுக்குள் ஒரு புது நம்பிக்கை நெருப்பைப் பற்றவைத்தது.
“சிறகுகள் பறவைக்கு மட்டுமல்ல, அறிவென்னும் சிறகு பெண்ணுக்கும் உண்டு” என்பதை உணர்ந்தாள்.
அடுத்த கணமே தன் ஏக்கத்தை, பயத்தை உதறி எழுந்தாள்.
பெற்றோர்களிடம் தனக்கான நியாயத்தை வாதிட்டு, தனது விலங்கை ஒடித்து, தன்னம்பிக்கையுடன் தடைகளை மீறிப் படித்து, அதே ஊரில் பெண்களின் கல்வி உரிமைக்காகப் போராடும் வழக்கறிஞராக உருவெடுத்தாள்.
தனது நியாயமான விருப்பத்தை நிறைவேற்றக் கூண்டுகளை உடைத்துப் பறந்து எழுவதே உண்மையான சமூக நீதி என உணர்ந்து கொண்டாள் மல்லிகா.
131 வார்த்தைகள்.
