கி. பார்வதி/தீர்மானம்

நீண்ட நாட்களாக வீட்டுக்குள்ளேயே  புதைந்து கிடந்த  அஞ்சனா , இப்போது தான் வெளியில் தலை காட்ட ஆரம்பித்திருக்கிறாள்.

பூங்காவின் இருக்கையில் அமர்ந்து  தனக்குப் பிடித்த புத்தகங்களைப் படிப்பாள். யாருடனும் பேசமாட்டாள்.

அவளை ஒருதலையாய்க் காதலித்தவன், தன்னை வஞ்சித்துவிட்டதாக நினைத்து, அவள் முகத்தில் ஆசிட் வீச, முகம் அலங்கோலமானது.

கண்களும், உயிரும் பிழைத்தன.

சிதைந்த முகமும், தான் அடைந்த அவமானமும், தண்டனையும் அவளை இத்தனை நாட்கள், முடக்கிப் போட்டிருந்தது.

படித்துக் கொண்டிருந்தவள், பறவையின் கீச் கீச் ஒலியில் திரும்பினாள். தன் உடையைப் போலவே அதுவும், செந்நிறத்தில் இருப்பது கண்டு வியந்தாள். அது அவளின் அருகில் சென்று  ஸ்நேகப் பார்வையை வீசியது.

மனிதர்கள் தன் கோர முகத்தை உற்று உற்றுப் பார்க்கும் பார்வையில் மனம் சிதைந்தவளுக்கு, இந்த ஸ்நேகப் பார்வை மிகவும் பிடித்தது.

 பறவைக்காகத் தினம் வந்தவள், அதைப் போலவே, சுதந்திரப் பறவையாய் இருக்க முடிவெடுத்தாள்.

முகம் கோணலாக இருந்தாலென்ன,  மனம் கோணலாக  ஒரு பொழுதும் அனுமதிக்கக் கூடாது. மனதைச் செம்மையாக வைத்திருக்கத்  தீர்மானித்தாள்.

109

One Comment on “கி. பார்வதி/தீர்மானம்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன