
அவள் தினமும் அந்த இடத்திலேயே அமர்ந்திருப்பாள். அன்று அவள் சிகப்பு புள்ளிப்போட்ட உடைகளை அணிந்துகொண்டு அமர்ந்திருந்தாள். கூடவே ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். அவள் எங்குச் சென்றாலும் புத்தகத்தைக் கையில் வைத்திருப்பாள். அன்று என்னவோ ஒரு சிவப்புப் பறவை அவள் பக்கத்தில் அமர்ந்திருந்தது. அதைப் பார்க்க அவளுக்கு ஆச்சரியம். அவள் அணிந்த ஆடையின் நிறத்தில் அதுவும் இருந்தது.
தன் நிறத்திலே இருக்கும் அந்தப் பறவையைப் பார்த்து கண் சிமிட்டினாள்.
அடுத்தநாள் அவள் வந்து அந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.
அந்த பறவையும் சிறிது நேரத்தில் அங்கு பக்கத்தில் வந்தமர்ந்தது.
அந்த பறவையைப் பார்த்துக் கேட்டாள்: “என் தோளில் அமர முடியுமா?”
பறவை தலை ஆட்டியபடியே அவள் தோளில் போய் அமர்ந்தது.
