
காவேரி தனக்குப் பிடித்தமான சிவப்பு நிற உடை அணிந்துகொண்டு பூங்காவில் உட்கார்ந்து இருந்தாள். கையில் ஒரு கடிதம்.
அவளுடைய எண்ணங்கள் முழுவதும் சிறு வயதில் நடந்த விஷயங்களைச் சுற்றியே வந்தன.
எட்டு வயதாக இருக்கும் போது அப்பாவின் கையைக் கோத்துக்கொண்டு கடைக்குச் சென்றது, திருவிழா சமயங்களில் ரங்க ராட்டினம் சுற்றியது ஆகிய அனைத்தும் மனதில் காட்சியாகத் தெரிந்தன.
அப்பொழுது அருகில் வந்து அமர்ந்தது ஒரு சிவப்பு நிறப் பறவை.
“காவேரி! அந்தக் கடிதத்தைத் தா. அதை நான் கொண்டு சேர்க்கிறேன்.”
பேசும் பறவையைப் பார்த்து ஆச்சரியமாக, “என் தந்தைக்கு எழுதிய கடிதம். முகவரியே தெரியாமல் அனுப்பவில்லை. நீ எப்படிக் கொண்டு சேர்ப்பாய்?” என்றாள்.
பறவை அந்தக் கடிதத்தை அலகில் கொத்திக் கொண்டு பறந்தது.
அடுத்த நாளும் அதே இடம். குழப்பமாக உட்கார்ந்து இருந்தபொழுது திரும்பவும் பறவை வந்தது.
சிறிது நேரத்தில் ஒரு பெரியவர் அதனைத் தொடர்ந்து வந்தார்.
“அப்பா!”
“மகளே!” என்று உச்சி முகர்ந்தார்.
“எங்கப்பா போனீங்க? நீங்கக் காணாமல் போய் பத்து வருடங்கள் ஆகிவிட்டன.”
“என்னை நல்ல வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி ஏமாற்றி ஒருத்தன் ராஜஸ்தானில் ஒட்டகங்கள், செம்மறி ஆடுகளைப் பராமரிக்க விற்றுவிட்டான். அங்கு அடைபட்டுக் கிடந்தேன்.
அங்கிருந்து எப்படியோ தப்பித்து வந்தேன். இரண்டு மாதங்களாக நம் குடும்பத்தைத் தேடி அலைந்தேன்.
இந்தப் பறவை அங்கே எனக்கு உதவியது. இங்கும் உன்னைக் கண்டுபிடிக்க உதவியது. பேசும் பறவை. உனக்கு என் முகச் சாயல் இருப்பதையும், உன் இளவயது போட்டோவையும் வைத்து உன்னைக் கண்டுபிடித்து என்னை அழைத்து வந்தது.”
மைதிலி அந்தப் பறவையை அன்பாக அணைத்துக் கொண்டாள்.
மொத்த வார்த்தைகள்: 165
