விஜயலக்ஷ்மி கண்ணன்/தன் அடையாளம்!

யாமினி பூங்கா அமர்வில் உட்கார்ந்து வரலாறு பாடத்தைச் சிரத்தையோடு படிக்க முயன்றாள்.
வீட்டிற்குள் உட்கார்ந்தால் எந்த நேரமும் அலறிக் கொண்டிருக்கும்
தொலைக்காட்சிப் பெட்டி.
வரும் திங்கள் முதல் இறுதியாண்டு பரீட்சை.
இந்த நேரம் பூங்காவில் கூட்டம் இருக்காது என்பதால் அந்த இடத்தை தேர்ந்து எடுத்தாள்.
திடீர் எனத் திரும்பிப் பார்த்தால் ஒரு சிவப்பு நிற கிளி அருகே வந்து இருந்து கீ கீய் என்றது.
அவள் படித்துக் கொண்டிருந்த பாடம் சிபி சக்கரவர்த்தியைப் பற்றி.
இந்த கிளி அந்த புறா போல் வந்தது தானோ?
யோசித்தாள் யாமினி.
கிளி பச்சை நிறம் தான்.சிவப்பு நிறம் எப்படி வந்தது?
புத்தகத்தை மூடி வைத்து கிளி அருகில் சென்று பார்த்தவளுக்கு.தூக்கி வாரிப் போட்டது.
யாரோ சில்மிஷம் செய்து ,சிவப்பு வண்ணம் பூசி அனுப்பியுள்ளார்.பாவம், கிளி!
யாமினி தோட்டத்தில் செடிகளுக்கும் புல்லுக்கும் நீர்பாய்ச்ச அருகிலிருந்த ரப்பர் குழாய் திறந்து உள்ளங்கையில் தண்ணீர் பிடித்து
கிளியின் மேல் ஊற்றினாள்.
என்ன ஆச்சரியம்!
சாயம் குழம்பாகி வழிந்து அந்த இடமே குருதி களம் போல் காட்சி அளித்தது.
கிளி தன்னை திரும்பிப் பார்த்துக் கொண்டது தன் அடையாளம் தொலைத்த அழகு கிளி.
மீண்டும் பச்சைக் கிளி கீ கீயீ என்று பாடிக்கொண்டு
தன்னிச்சையாகப் பறந்து விட்டது!
124 words

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன