
வெண்பருத்தி வெண்பருத்தி
வெடித்துவந்த வெண்பருத்தி
விதவிதமாய் ஆடைதந்து..
மானம் காத்த வெண்பருத்தி.!
தன்மானத்தை முன் நிறுத்தி
கதராடை தனையுடுத்தி..
மண்பிறந்த வெண்பருத்தி
மனம் நிறுத்தி வாழ்த்துவமே.!
காந்தி மகான் கையிருந்து
கைராட்டை தனில் சுழன்று
காமராசர் தோள் சுமந்த
பேறு பெற்ற வெண்பருத்தி.!
சூரியனை தான் மறைத்து..
சோர்ந்து போன மேனியினை
காப்பதற்கே விளைந்து வந்த
கழனியிலே வெண் பருத்தி.!
