எம்.எல்.பிரபா/ஓர் இரவு

சங்கர் தினமும் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் பையை வைத்துவிட்டு பக்கத்து வீட்டில் உள்ள சின்னக் குழந்தை பாபுவுடன் விளையாடுவான். அவனுடைய அப்பாவும், அம்மாவும் வேலைக்குச் சென்று திரும்பும் வரையில். குழந்தையும் அவனுடன் சிரித்து விளையாடும்.
மங்கையும், சங்கரிடம் குழந்தையை விட்டுவிட்டு தன் வீட்டு வேலையைக் கவனிப்பாள் .அன்று விளையாடிக் கொண்டிருந்தபோது “சங்கரா வாடா” என்று அம்மாவின் குரல்.
மங்கையிடமும், பாபு விடமும் டாட்டா சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்து விட்டான்.
இரவு 10 மணிக்குப் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. பொத்.. என்று சத்தம் கேட்டது. மேலிருந்து கீத்தும், மண் சுவரும் விழும் சத்தம். “ஐயோ” என்று அலறி அடித்துக் கொண்டு எல்லோரும் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். சங்கரும் அவன் அப்பா, அம்மாவும் வெளியே வந்து பார்த்தார்கள். பக்கத்து வீடு இடிந்து விழுந்து கிடந்தது. குழந்தை அலறும் சத்தம். சங்கரின் அப்பா கீற்றுகளை நகர்த்தினார். சங்கர் ஓடிப்போய் குழந்தை பாபுவை தூக்கி அணைத்தபடி சமாதானப்படுத்தினான் .சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. பாபாவின் அப்பா அம்மாவை ஏற்றிச் சென்றது. பெரியவர்கள் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அன்று இரவு முழுவதும் சங்கர் குழந்தை பாபுவை தன் தோளிலேயே சுமந்திருந்தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன