சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/அண்ணன் எனும் வாஹனம்

அண்ணன் அர்ஜுன், தம்பி அப்பு.
அப்புவுக்கு நடக்கத் தெரியும். ஓடவும் தெரியும். பேசத் தெரியும். வீட்டில் நடப்பான். ஆனால் அண்ணனைக் கண்டால் மட்டும் நடக்க மாட்டான்.
அண்ணன் இருக்கிறானே!
“அண்ணா… தூக்கு!”
“டேய், உனக்குக் காலே இல்லையா?”
“இருக்கு… ஆனால் நடக்க மாட்டேன் “
அண்ணன் கழுத்தில் ஏறிக்கொள்வான்.
ஒருநாள் அர்ஜுன்
“இனிமேல் உன்னைத் தூக்கவே மாட்டேன்.”
“சரி!”
என்று சொல்லிவிட்டுப் போய் ஒரு பிளாஸ்டிக் நாற்காலியைக் கொண்டு வருகிறான்.
“இது எதுக்கு?”
“அண்ணா… நீ களைப்பா இருந்தா இதுல உட்கார்ந்துக்கோ. அப்புறம் என்னைத் தூக்கலாம்!”
அர்ஜுனுக்கு கோபம் தாங்கவில்லை.
“நான் உன்னை ஏன் தூக்கணும்?”
அப்பு மிகவும் சீரியஸாக:
“நீ என் அண்ணன். உனக்கு வேற வேலை என்ன இருக்கு?”
“நான் தூக்கிறேன்” அம்மா முன்வந்தாள்
“என்னை யாரும் தூக்க வேண்டாம். அண்ணன் இருக்கிறான்!”
“நீ எதுக்கு என்னை மட்டும் தூக்க சொல்றன்னு எனக்கு தெரியணும் இப்போ. ” கோவம் வந்தது அர்ஜுனுக்கு.
“நானே நடந்தா ஒன்னும் தெரியல
அம்மா தூக்கினா நிறைய வேடிக்கை பாக்க முடியல. நீ உயரமா இருக்க நீ தூக்கிகிட்டா, நிறைய வேடிக்கை பார்த்திட்டே வரலாம்
அதுனால நீதான் தூக்கணும் “

129

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன