மடிப்பாக்கம் பிரபாவதி/மணி அண்ணன்

ரங்கனின் கூட்டாளிகள் பாண்டி, பன்னீர் மூவரும் சேர்ந்து எட்டுப் பத்து வயது பிள்ளைகளைக் கடத்தி வந்து அடித்துப் பிச்சையெடுக்க வைப்பார்கள்.
குழந்தைகள் யாரிடமாவது எதாவது பேசினால் இவர்களுக்குத் தெரிந்துவிடும். அடிப்பின்னி விடுவார்கள்.
ஓரிருவர் தப்பித்தும் இருக்கிறார்கள். நன்றாக இருக்கிறார்களா தெரியாது. அன்று ஒரு சின்னக் குழந்தையைக் கடத்தி வந்திருந்தான். மாநிலம் விட்டு மாநிலம் கூட்டி வருவார்கள். பாஷை தெரிந்தால் பிரச்சினை என்பதால்தான்.
மணிக்கு இந்தக் குழந்தையைப் பார்த்தது முதல் முகம் தெரியாத அம்மா ஞாபகத்திற்கு வந்தாள். குழந்தையை காட்டி பிச்சை எடுக்க வேண்டுமாம்.
மணி குழந்தையைத் தூக்கிக் கொண்டான். தனக்கென்று யாரும் இல்லாத நிலையில் அவர்கள் ஆடிய ஆட்டத்திற்கு ஆடினான்.
ஆனால் குழந்தையை எடுத்துக் கொண்டு ஒரு சிலரிடம் பிச்சை வாங்கியபின் தைரியமாகக் குழந்தையுடன் ஆட்டோவில் ஏறி காவல்துறை நிலையம் சென்றான்.
காவல்துறை கூட்டாளிகள் மூவரையும் அடித்து இழுத்துப் போய் சிறையில் அடைத்தனர். மற்ற குழந்தைகளைக் காப்பாற்றி சிறுவர் காப்பகத்தில் சேர்த்தனர்.
மணி மட்டும் பாப்பாவின் பெற்றோருக்குச் செல்ல மகனாக ஆனான். பாப்பாவிற்கு அன்பான ஆசையான அண்ணன் கிடைத்து விட்டான்.

117

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன