பத்மா ராகவன்/காணாமல் போன குழந்தை

“சே” அலுத்தபடி சிக்னலில் காரை நிறுத்தினாள் சௌம்யா.
கார் கண்ணாடியைத் தட்டின ஆறுவயது சிறுவன் கையில் ஆறுமாதக் கைக்குழந்தை.
“தங்கச்சிக்கு ஜுரம், மருந்து வாங்கக் காசில்லை ஏதாச்சும் குடுங்கம்மா” என இரைஞ்சும் அவனை, இரக்கத்துடன் பார்த்தவள் மனசு துடித்தது. கைக்குழந்தையை வைத்துக்கொண்டு இந்த சின்னப்பையன் துடிக்கிறானே. பெற்றோர் என்ன செய்கின்றனர். பொறுப்பில்லாதவர்கள்.” பலவித எண்ணங்கள் அலைக்கழித்தது.
அதற்குள் பச்சை விளக்கு எறியவே, “ஏய் வண்டில ஏறு. நான் டாக்டர் கிட்ட கூட்டிப்போகிறேன்” என்றபடி அவன் ஏறுவதற்காக, கார் கதவைத் திறந்ததும் அப்பையன். எடுத்தான் ஒரே ஓட்டம்.
சந்தேகம் வலுக்க. காரை ஓரம்கட்டி, அவனைத் துரத்தி. சற்று தூரத்திலேயே பிடித்து, கைக்குழந்தையை வலுக்கட்டாயமாகப் பிடுங்கினாள். மயக்கமாயிருந்த அந்தக்குழந்தை முகம் இவளை என்னவோ செய்தது.
போலீசில் பிடித்துத்தருவேன் எனப் பயமுறுத்தி, அவனது முதலாளி(!)யைக் காட்ட வைத்ததில், சிறுபிள்ளைகளைக் கடத்தி, பிச்சை எடுக்கவைத்து அதில் பிழைக்கும் கூட்டம் அது என்பது தெரியவந்தது.
மேலும் விசாரிக்க, ஆறுமாதம் முன் பிரசவித்ததும், மருத்துவமனையில் களவாடப்பட்ட, ஒருமுறை கூட பார்க்காத, தன் பெண்தான் அந்தச் சிறுகுழந்தை என்றும் தெரியவந்தது.
போலீஸ் உதவியுடன் அனைத்துக் குழந்தைகளையும் மீட்டு, திரும்பக்கிடைத்த மகளை அணைத்தாள் சௌமியா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன