நாகேந்திர பாரதி/ தீப்பெட்டி தொழிற்சாலை

தீப்பெட்டி தொழிற்சாலையில் இருந்து வரும்போதே தம்பியின் நினைப்புதான் அவனுக்கு. பக்கத்து வீட்டு ஆயா பார்த்துக் கொள்வாள் தான். வாரச் சம்பளத்தில் பாதி அவளிடம் தானே கொடுக்கிறான். . அந்தப் பிஞ்சு முகத்தின் சிரிப்பில் மயங்கி ‘ தம்பி , தம்பி ‘ என்று அவன் பிறந்த நாள் அன்று அவனைத் தோளில் தூக்கிக் கொஞ்சியவன்.
‘அம்மா, தம்பியை நான்தான் படிக்க வைப்பேன். தீக்குச்சி அடுக்கும் காசெல்லாம் அவனுக்கே சேமிக்கப் போகிறேன்’ என்று அம்மாவிடம் சொன்னபோது அவன் நினைக்கவில்லை , அப்பாவும் அம்மாவும் தீப்பெட்டித் தொழிற்சாலைத் தீவிபத்தில் கருகிப் போவார்கள் , என்று .
‘இந்த ஊர் மக்கள் மத்தியில் இவனை ஆபிசராக்கி காட்டுவேன் ‘ என்ற கனவைக் கண்களில் தேக்கி வைத்திருப்பவன் அவன். தூங்கிக் கொண்டிருந்த தம்பியைத் தோளில் தூக்கி உசுப்பி, கொண்டு வந்த வாழைப்பழத்தை ஊட்டி விட்டுத் திரும்பவும் தோளில் சாய்த்துத் தட்டிக் கொடுத்துத் தூங்க வைக்கும் அவன் கண்களில் தெரியும் தாய்மை சொல்கிறது . அவன் தாயுமானவன் என்று .

112

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன