சாரதா ஸ்ரீ நிவாசன்/ தங்கை

அறுபது வயது நிரம்பிய பாலுவுக்கு நேற்றுதான் அறுபதாவது திருமண நாள் நடந்து இரவுதான் உறவுகள் ஒவ்வொருவராகக் கிளம்பிச் சென்றனர். இப்போது தங்கி இருப்பது அவரது செல்ல தங்கை ஜெயா மட்டுமே.
பிரபல பத்திரிகையைப் புரட்டிக் கொண்டு இருந்த அவருக்கு அந்த ஓவியம் பார்த்தவுடன் கை அங்கேயே நின்று புரட்ட மறுத்தது.
விளையாடி விட்டு வரும்போது தனியாக அங்கிருந்த குழந்தை அருகில் சென்றவனைப் பார்த்து அது சிரிக்க அங்கேயே சொக்கு போய் நின்றான் அதன் கைகால்களில் அழகான மணிகள்.
ஆனால் யாரும் அருகில் இல்லை அதை தனியாக விட மனமில்லாமல் அதை தன் கைகளில் தூக்கிக் கொண்டான். பழக்கமில்லாத விஷயம் என்பதால் சிறிது தடுமாறித்தான் போனான்.
வீட்டிற்கு வந்தவனைப் பார்த்த அம்மா அப்பா திகைத்தனர். “இவள் நமக்குத்தான் “என்றான். அம்மா அப்பாவும் அவனை போலீஸ் ஸ்டேஷன் கூட்டிப் போய் உரிய முறையில் அவளைத் தூக்கி வந்தார்கள்.
அண்ணா காப்பி என்று எதிர்நின்ற ஜெயாவை இன்றும் அதே வாஞ்சையுடன் பார்த்தார்.
குனிந்து பத்திரிகையைப் பார்த்த அவள் அந்த ஓவியத்தைப் பார்த்ததும் “என்ன அண்ணா ஃபிளாஷ் பேக்கா” என்று சிரித்துக் கொண்டே அவர் குடித்து முடித்த காப்பி டம்பளரை எடுத்துச் சென்றாள்.

130

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன