உமா ஸ்வாமிநாதன் /உறவின் ஆழம்

அந்த சிறிய கிராமத்தில், பச்சைப் பசேல் வயல்வெளிகளுக்கு நடுவே அமைந்திருந்த ஒரு சின்னஞ்சிறிய கூரை வீடு அங்கே ரவி, அவனது செல்லக் குட்டித் தம்பி மணி, மற்றும் அவர்களுடைய பெற்றோர் என நால்வர் அடங்கிய அன்புக் குடும்பம் வாழ்ந்து வந்தது.
வறுமை அவர்களின் குடிசையைச் சூழ்ந்திருந்தாலும், அதைவிட அதிகமான அன்பும் பாசமும் அந்த வீட்டின் ஒவ்வொரு மூளையிலும் நிறைந்திருந்தது.
​ஒரு நாள், மணிக்கு பயங்கரமான காய்ச்சல் வந்தது. மருத்துவர்கள் மருந்து கொடுத்தனர். ஆனால், குணமாகவில்லை.
ரவி தன் தம்பியை தன் தோளில் சுமந்து, பல மணி நேரம் ஆஸ்பத்திரி வாசலில் காத்து நிற்பான்.
எல்லோரும் மிகவும் கவலையாக இருந்தார்கள்.
அன்று சாயந்தரம், ஒரு முதியவர் அந்த கிராமத்திற்கு வந்தார். அவர் ஒரு பாரம்பரிய வைத்தியர். அவரிடம் ரவி தன் தம்பியைத் தூக்கிக் கொண்டு சென்றான்,
அவனது கவலையைப் புரிந்து,
முதியவர் ரவியிடம், “கவலைப்படாதே நான் உனது தம்பியைக் குணப்படுத்துகிறேன்,” என்று கூறினார்.
​முதியவர் நன்கு குணப்படுத்தினார். ரவியும் அவன் குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
ரவி முதியவருக்கு நன்றி கூறினான்.
​உறவின் ஆழம் அளவிட முடியாதது. அன்பு மற்றும் பாசம் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு நீ தான் உதாரணம் என்றார்.

130

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன