செல்லம் சேகர்/அர்த்தமுள்ள ஆன்மிகம் 11

முப்பெரும் சக்திகளின் அஞ்ஞானமும் விஞ்ஞானமும்

ஆதிபராசக்த்தியின் மூன்று முக்கிய ஆற்றல்களை குறிக்கும் சக்திகளே இச்சா சக்தி , கிரியா சக்தி மற்றும் கிரியா சக்தி ஆகும் . இந்த மூன்று சக்திகளும் பூலோகத்தையும் மனித வாழ்க்கையையும் இயக்கும் அடிப்படையான மூன்று ஆற்றல்கள் ஆகும் …
Motivation , planning action !!!!
முப்பெரும் சக்திகள் என்பது இச்சை கிரியை ஞானம் என்பது நாம் எல்லார்க்கும் தெரியும் … ஆன்மீகம் மற்றும் பூமியின் ஆற்றல் சக்திகள் இவை மூன்றும் ஆன்மீகத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி) ஆகியவற்றுடன் தொடர்புடையது.
விருப்பங்கள் …ஆற்றல் தருபவள் துர்கை …
கிடைத்த ஆற்றல் செயல்படுத்த லட்சுமி தேவி இயக்குகிறாள் செயல்
செயலுக்கு உரிய திட்டமிடல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கு மற்றும் சீர்தூக்கி பார்த்தால் போன்ற புத்தி கூர்மை அளிப்பவள் சரஸ்வதி தேவி .
விருப்பங்கள் , செயல்கள்கள் திட்டமிடல் இவை மூன்றும் இருந்தால்தான் பூலோகத்தில்மனித வாழ்க்கை மேம்படும் .
முப்பெரும் சக்திகளின் ஆற்றலை அறியாமையால் உண்மை நிலை புரிந்து கொள்ளாதவர்கள் இந்த ஆற்றலை அஞ்ஞானம் என்றும் . அறிவியல் ரீதியாக பகுத்தறிந்து பிரபஞ்சத்தின் ஆற்றலை இந்த சக்திகளோடு தொடர்பு படுத்தி பார்க்கும் போது இதில் விஞ்ஞானமும் உள்ளதை உணரமுடியும் .
நவராத்திரியின் போது இச்சா சக்தி , கிரியா சக்தி ஞானா சக்தியாக விளங்கும் துர்கா லட்சுமி சரஸ்வதியை பூஜித்தலே நவராத்ரி .
இச்சா சக்தி : ஆசையும் பேராசையும் மட்டுமே வாழ்க்கையை செயல்பட வைக்கும் என்று நினைப்பது. எதற்கும் ஆசைப்படு என்று தவறான புரிதலோடு இருப்பது அஞ்ஞானம் .
மலைமகளான துர்கா தேவியே இச்சாசக்திக்கு உரியவள் … நம் விருப்பங்களை விரும்பிய படியே நடத்தி தர துர்கா தேவியை முதல் மூன்று நாட்கள் வழிபடுவதன் மூலம் இந்த தேவி நமது வாழ்வில் நல்ல எண்ணங்களுடன் நற்காரியங்களை செய்ய தூண்டி , அதில் தடை ஏதும் ஏற்படாமல் , அப்படி தடைகள் வந்தாலும் அதை தகர்த்து விருப்பங்களை பூர்த்தி செய்யும் ஆற்றலை தருபவள் .
விருப்பங்கள் மற்றும் ஆசைகளை நிறைவேற்றுபவள் இச்சாசக்தியான துர்கா தேவி .. உடல் ரீதியாகவும் மன ரீதியிலும் ஆற்றலை தருபவள் துர்கா தேவியே
கிரியா சக்தி : செல்வம் என்பது வெறும் பணம் மட்டுமே என்றும் பணம் என்ற ஒன்று இருந்தால் ஆணவத்துடனுடன் எதையும் சாதிக்கலாம் அதையும் கடின உழைப்பு இல்லாமல் குறுக்கு வழியிலும் அடையலாம் என்று எண்ணுவது அஞ்ஞானம் .
செல்வம், வளம் மற்றும் அதற்கான செயல்வடிவம்.
அலைமகளான லட்சுமி தேவியை பூஜிப்பது நமது செயல்களை சுணக்கம் இல்லாமல் செய்து முடிக்கும் வல்லமையை தருபவள் . கிரியா சக்தி தருபவள் . கிரியை என்றால் செயல் .
எண்ணிய விருப்பங்களைச் செயலாக மாற்ற நமக்குள் முயற்சியும் அதற்குரிய செல்வமும் வளமும் இருந்தால் தான் நமது செயல்கள் வெற்றி பெரும் . அந்த முயற்சியும், செல்வமும், வளம் நிறைந்த வாழ்வை வழங்கி இயக்குவது லட்சுமி தேவியே.
ஒரு வினை அல்லது செயல் நடந்தால் மட்டுமே அங்கு ரிசல்ட் கிடைக்கும் . அதற்கு உடல் மன ரீதியான செயல்பாடு இருப்பதற்கு இந்த பூமியின் தொடர் ஆற்றலாக வளங்களை உருவாக்கி தந்து அதன் ஆற்றல்கள் அளிப்பதால் செயல்பாடுகளை தடங்கல் இல்லாமல் செய்ய முடியும் …அந்த வளங்கள் அறிவியலால் கிடைக்கிறது .
ஞானா சக்தி : கலைமகளான சரஸ்வதி தேவியை வழிபட நமக்கு ஞானத்தை வழங்குபவள் . அறிவு மற்றும் பூலோகத்தின் ரகசியங்களை உணரும் நிலை.
தங்களுக்கு தெரிந்த அரைகுறை அறிவுதான் சரியானது என்று நினைப்பதுவும் மற்றதெல்லாம் மூட நம்பிக்கை என்று என்று கூறுவதுவும் அறியாமையே !!
எந்த செயலை செய்ய வேண்டுமானாலும் அதற்கு முதலில் தெளிவான அறிவுடன் திட்டமிட்டால் மட்டுமே செயல்படுத்த முடியும் …அப்படி திட்டமிட ஞான சக்தியின் அருள் தேவை .
ஞானம் என்றால் அறிவு புத்தி கூர்மை என்பது அனைவர்க்கும் தெரியும் . விருப்பப்படும் செயலை திறம்பட செய்து முடிக்க நல்ல திட்டமிடலும் அதற்குரிய புத்திக்கூர்மையும் தருபவளே கலைமகள் .
முப்பெரும் சக்திகளைப் பக்தியுடனும் பயத்துடனும் வணங்குவது ஆன்மிகம் அறியாமை அஞ்ஞானம்; அதை அறிவியல் பூர்வமாக பார்க்கின் பூலோகத்தின் விதிகளை, ஆற்றலை, இயக்கத்தைப் பகுத்தறிவோடு புரிந்துகொள்வது விஞ்ஞானம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன