கஸ்தூரி குருசாமி /மனிதருள் தெய்வம்

கோபு இரண்டு வயது தம்பி பாபுவை தோளில் போட்டுக்கொண்டு வேலை தேடி அலைகிறான். பெற்றோர் சிவகாசியில் ஒரு பட்டாசு கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.ஒரு தீ விபத்தில் இருவரும் இறந்து விடவே, குழந்தைகள் அனாதை ஆனார்கள். உறவினர்கள் எங்கே நம் பொறுப்பில் வந்து விடுமோ என அஞ்சினர்.ஆனால் பிறந்ததிலிருந்து பாபு தன் பெற்றோர்களின் அயராத உழைப்பையே பார்த்து வளர்ந்தவன். குழந்தையைத் தோளில் போட்டுக்கொண்டு சைக்கிள் பஞ்சர் ஒட்டும் கடை, மளிகைக் கடை என அலை ந்தான்.யாரும் வேலை கொடுக்கவில்லை. ஒருநாள் வேலை தேடி அலுத்துப் போய் நடந்து வரும்போது, ஒரு பங்களாவின் தோட்டத்தில் ஒருவர் “ஒரு பயலும் ஒழுங்கா செடிக்குத் தண்ணீர் விடுவதில்லை . எல்லாம் விலை உயர்ந்த செடிகள். இதைப் பராமரிக்க முடியாமல் என்ன செய்கிறீர்கள்?” எனத் தோட்டக்காரனை கோபித்து கொண்டிருந்தார். கோபு தைரியமாக உள்ளே சென்று” ஐயா நாங்கள் பெற்றோர்கள் இல்லாத அனாதைகள். தம்பியைத் தோட்டத்தில் விளையாட விட்டுவிட்டு நான் செடிகளுக்கு நீர் பாய்ச்சுகிறேன். நீங்கள் என்ன வேலை சொன்னாலும் செய்கிறேன். பசிக்கு மட்டும் உணவு தந்தால் போதும்” என்றான்.
“நீயோ சிறு பையன். தம்பியை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? “
“ஒரு வாரம் நான் செய்வதைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்” என்றான். ஒரு வாரமானது.அவனது திறமையைக் கண்டு அவருக்கு மிகுந்த ஆச்சரியம். “நாளையிலிருந்து உனக்கு இங்க வேலை இல்லை”. என்றார்.” ஐயா நான் ஏதாவது தப்பு செய்தேனா? ” “இல்லை நாளை காலை வா.” என்றார் காலை வந்ததும் அவனை அழைத்துக்கொண்டு ஒரு ஆதரவற்றோர் பள்ளியில் சேர்த்து, அவனுக்குத் துணி புத்தகம் மற்றும் தேவையான யாவும் கொடுத்து அவன் வாழ்விற்கு வழி காட்டினார்.மனிதம் சாகவில்லை

180

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன