அழகியசிங்கர்/உலக தபால் தினம்

தபால் பெட்டியில் போடும் தபால்கள்
எல்லோருக்கும் போய்ச் சேருகிறதா?

40 ஆண்டுகளாக
அச்சடித்துக் கொண்டிருக்கும்
பத்திரிகை
போய்ச் சேருகிறதா?

கிடைத்து விட்டதென்று
வாயைத் திறந்து
சொல்லாமல்
இருக்கிறார்கள் கனவான்கள்

கிடைத்திருக்குமென்று
நம்புகிறேன் நான்
முன்பு தி.க.சி இருந்தார்
வல்லிக்கண்ணன் இருந்தார்
ஒரு கார்டில் பத்திரிகைக் கிடைத்தது
என்று எழுதி விடுவார்கள்

தீக்கதிரில் எழுதும் நண்பரொருவர்
சிவப்பில் எழுதினால்
கண்டு கொள்வார் போலிருக்கிறது

பெரிய பத்திரிகையின் வாலைப் பிடித்துக் கொண்டிருப்பார்

இருக்கட்டும் இருக்கட்டும்
உலக தபால் தினத்தில்
தபால் பெட்டி என்ன செய்யும்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன