லீலா ராமசாமி /குப்பையில் மாணிக்கம்

குமரன் அந்த குப்பைத் தொட்டியின் அருகிலிருந்த பிளாஸ்டிக் பொருள்கள், காகிதங்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தான்.
ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. குப்பைத் தொட்டிக்குள் எட்டிப் பார்த்தான்.
கையைக் காலை உதைத்துக் கொண்டு அழுவதற்குக் கூட தெம்பில்லாமல் முனகலான சத்தத்துடன் ஒரு குழந்தை!
பைகளைக் கீழே போட்டுவிட்டு தொட்டிக்குள்ளிருந்த குழந்தையைத் தூக்கினான்.
அந்தப் பக்கமாக ஒரு பெரியவர் வந்தார்.
“சார்! குப்பைத்தொட்டிக்குள்ளே இந்தக் குழந்தை இருந்தது. இது யாரோடு குழந்தையென்று தெரியலை”
“போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு சேருப்பா. அவங்க கண்டுபிடிச்சிச் சேத்துடுவாங்க”
குமரன் காவல் நிலையத்திற்குப் போகுமுன் டீக்கடையில் பால் வாங்கிக் குழந்தைக்குப் புகட்டினான்.
காவல் நிலையத்தை அடைந்தபோது,”எப்படியாவது என் குழந்தையைக் கண்டுபிடிச்சித் தாங்க சார்” என்று ஒரு பெண் அழுது கொண்டிருந்தார்.
குமரன் கையில் இருந்த குழந்தை அந்த பெண்ணைப் பார்த்ததும் அவளிடம் தாவியது. அந்தப் பெண்ணும் குழந்தையை வாரியணைத்து, “இதுதான் சார் என் குழந்தை” என்றாள்.
அந்தப் பெண்ணின் வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தபோது அந்தப் பெண்ணின் மாமியார் தான் அந்தப் பெண் குழந்தையைப் பிடிக்காமல் எடுத்துச் சென்று குப்பைத் தொட்டியில் வீசி இருக்கிறார் என்று தெரிந்தது.

(வார்த்தைகளின் எண்ணிக்கை 128)

                   **

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன