
:சிவாவும் அப்புவும் அண்ணன் தம்பிகள். அவர்களின் அப்பா ஒரு தையல் கடை யை வைத்திருந்தார். சமீபத்தில் வந்த டெங்கு காய்ச்சலால் அவர் உடல் பலவீனம் அடைந்தது. மருத்துவமனையில் சேர்த்தும் அவர் உடல் நலம் சரியாகவில்லை. ஓரிரு நாட்களில் இறந்துவிட்டார். அந்தக் கவலையிலேயே அவர்களுடைய அம்மாவும் இறந்துவிட்டார்கள். எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிவாவுக்கு வாழ்க்கை சவால் நிறைந்ததாக மாறியது. இருந்தாலும் அவருடைய பள்ளி ஆசிரியர்கள் அவனுக்கு உறுதுணையாக இருந்தார்கள். அவனுக்கு எல்லா உதவிகளையும் செய்து வந்தார்கள். அவன் அப்புவுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் மாறினான். பள்ளி நேரம் போக மீதி நேரம் சில வீடுகளில் வேலைக்குச் சேர்த்தான். அவனே சமைத்தான் .தம்பியை நன்றாகப் பார்த்துக் கொண்டான். அப்பு வைப் பொருத்தவரை அண்ணன் ஒரு கோவில் ஆவான். இப்படியான உடன்பிறப்பு பாசங்கள் இந்த காலத்திலும் தொடர்வது அதிசயம் தான் என்று ஊர் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் சொல்லுவதும் உண்மைதானே?
118
