சுந்தர மணிவண்ணன்/ தொடரும் உயரம்

அந்த ஆசிரமத்தின் ஒவ்வொரு சுவரிலும் அந்தப் புகைப்படம் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் வீட்டறையிலும், அது கம்பீரமாய் காட்சி அளித்தது.

 அந்தப் படத்தை பார்த்துக் கொண்டிருந்த அவன் மனக்கண் முன், அந்த நினைவுகள் மெல்ல நிழலாடத் தொடங்கின.

​அன்று… அந்தப் பிஞ்சு தோள்களில் சாய்ந்தபடி தளர்ந்துபோய் கிடந்தது. கண்களில் கோபக் கனல் மூண்டெரிய, அந்தச் சின்னஞ்சிறு குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவன் தெருவில் வேகமாக நடக்கத் தொடங்கினான்.

​அந்தக் கொடூரத் தீ விபத்தில், தாய் தந்தையை இழந்து, . அனாதையாய் நின்ற அந்தப் பிஞ்சைத் தன் தோளோடு அணைத்தபடி, தெருவில் அவன் நடந்தான்.

​தன்னை அணைத்து ஆதரவு தந்த அந்த அனாதை ஆசிரமத்தில், அந்தப் பிஞ்சையும் தன்னோடு  இணைத்துக் கொண்டான்.

அந்த ஆசிரம குருவின் மாறாத அன்பிற்கு இருவரும் அடிமையானர்.

​காலங்கள் உருண்டோடின.  ஆட்சியாளர்கள் என்ற அந்தஸ்த்தில் இருவரும் (IAS) பொறுப்பேற்றனர். இருந்தும் அந்த ஆசிரமத்தை அவர்கள் மறக்கவில்லை. அங்கு பயிலும் குழந்தைகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, சீரிய முறையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்.

​ அங்கு வளர்ந்த இரு இளைஞர்கள் அவர்களின் கால்களைத் தொட்டு வணங்கினர்.

“ஐயா… UPSC-ல அகில இந்திய அளவில் தேர்ச்சி பெற்றுட்டோம்.”

அவர்கள் இருவரும் சுவரை நோக்கித் திரும்பினர்.

“நாங்கள் இந்தப் படத்தைப் பார்த்துத்தான் வளர்ந்தோம், ஐயா.”

அவன் எதுவும் பேசவில்லை.

தொங்கும் படம் சொன்னது.உயரம் தொடர்கிறது.

146 Words.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன