
எங்கள் குடும்பத்தில் நிறைய வருடம் கழித்து இன்னொரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பத்திரி என்ற பெயர்.
எனக்குத்தான் அவனைப் பார்க்கும் போதுதான் பொறாமை. என்னை விட 15 வயது சிறியவன். அம்மாவும், அப்பாவும் பத்திரியை விட்டுப் பிரிய மாட்டார்கள். எல்லாம் பத்திரி பத்திரி என்று கொண்டாடுவார்கள். நான் அவர்களிடம் என் வருத்தத்தைத் தெரிவிப்பேன். அவர்கள் என்னைச் சமாதானம் செய்வார்கள்.
“நீ பெரிய பையனா வளர்ந்துட்டே. நீதான் அவனைப் பாத்துக்கணும்..” என்பார்கள்.
அப்பா பண்ற வியாபாரத்தில் அவருடைய விரோதிகள் அப்பாவையும், அம்மாவையும் கொன்று விட்டார்கள். என்னையும், பத்திரியையும் விட்டுவிட்டார்கள். இந்தக் கொடூரமான கொலை என் முன்னால் நடந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் அழுது கொண்டிருந்தேன். பத்திரி வீல் வீல் என்று கத்திக்கொண்டிருந்தான். நான் ஓடிப் போய் அவனைத் தூக்கி வைத்துக் கொண்டேன்.
பத்திரி கத்துவதை நிறுத்தினான்.
90
