
சென்னை வாழ்க்கை
பெயருக்குத்தான் அது
மய்ய சென்னையில்
இசையும் நாடகமும் இயலும் கொட்டிக் கிடக்கிறது
மார்கழி மாதம் சொல்லவேவேண்டாம்
சென்னையைச் சுற்றிய சிற்றூருக்கு வாய்ப்புகள்
அந்தப்படி க்கு இல்லை
நகரின்
ஆக்கிரமிப்பு நச்சு
எளிய வர்களின் ஏக்கங்களுக்கு இரக்கம் காட்டாது
வெள்ளைக்காரன் போட்ட மாநகர ரயிலும்
இல்லாமல் போனால்
ஏழை எளியோர்க்கு ருசிக்கச் செய்யாது
துளியேனும்.
பேருந்தில் ஏறி மாநகரில் ஓரிடம் சென்று திரும்ப
இரண்டு மணி நேர அவகாசம் போதவே போதாது
போவதற்கும் மீள்வதற்கும் நான்கு மணி நேரம் அனர்த்தமாய்ப் போய்விடும்
கையில் காசும்
மய்யமாய்க் குடியிருப்பும்
கால்களில் வலுவும்
இல்லா மாநகர வாழ்க்கை
எளியோர்ககென்றும்
விதிக்கப்பட்டே கிடக்கிறது
யார் கேட்கப் போகிறார்கள்
நான் புலம்பிக் கொண்டிருக்கிறேன்.
