
சுப்ரமணி ,குட்டிப் பாப்பாவை கையால் கவ்வின வண்ணம், அந்த வீட்டிலிருந்து தப்பி ஓடிக் கொண்டிருந்தான்.பின்னால் இரண்டு ரவுடிகள் துரத்தினர்.
“டேய் நில்லு அதே இடத்தில்,கைல கிடைச்சே கண்ணு முழியை நோண்டி எடுத்துடுவோம்.”
அந்த திருப்பத்தில் ஒரு மாட்டுக் கொட்டகை, சுப்ரமணி அங்கிருந்த தண்ணித் தொட்டியின் பின்னால் ஒளிந்து கொண்டான்.கடவுளே இது அழுது காட்டிக் கொடுக்காம இருக்கணுமேனு,தெரு முனைப் பிள்ளையாரை வேண்டிண்டான்.பாவம் பாப்பாவுக்கு நல்ல தூக்கம் அவன் கழுத்தை கட்டிண்டு தூங்க ஆரம்பித்தது.அந்தக் கயவர்கள் இருவரும், குழந்தை சத்தம் வருதானு கவனித்தனர்.
ஒன்றும் கேக்காததால், ஏமாற்றத்துடன் திட்டிக் கொண்டே திரும்பினர்.
அவர்கள் போவதைப் பாத்த சுப்ரமணி மெதுவாகக் கிளம்பினான்.இந்த கயவர்களிடம் திரும்ப மாட்டிக்காம இருக்கணுமேனு பயந்துண்டே நடந்தான்.குழந்தை சட்னு முழிச்சிண்டு அழ ஆரம்பிச்சது.
“டேய் சுப்ரமணி குளிச்சிட்டு வர வரை குழந்தையை பாத்துக்கடான்னா தொட்டிலை ஆட்டாம என்ன கனவுலகத்தில் இருக்கே”னு சத்தம் போட்டுண்டே அம்மா கமலம் குளியலறைல இருந்து வெளியே வந்தாள்.
டி.வி.ல. ஏதோ பழைய சினிமாவைப் பாத்த விளைவு சுப்ரமணியின் மூளையில் அழுத்தமாகப் பதிந்திருந்தது.அது கனவு போல வந்து அவனைப் பயமுறுத்தியிருக்குனு உணர்ந்து தனக்குள் வெட்கப் பட்டுக் கொண்டான். தொட்டிலில் இருந்த குழந்தை சிரித்தது.
125
