
“டேய் பையா! என்ன கையில குழந்தை? எங்கிருந்து கடத்திட்டு போறடா?”
தன்னை இப்படிஅதட்டிக் கேட்ட இரண்டு பேரையும் ஏறிட்டான் மோகன்.
பிறகு சொன்னான்.
“இந்த குழந்தைக் குப்பைத் தொட்டியில் கிடந்துச்சு அதை எடுத்துட்டு பக்கத்துல நான் தங்கிஇருக்கற அனாதை ஆசிரமத்திற்கு போய்கொடுக்கப்போறேன்”
“அங்கே எதுக்குடா போற ?எங்க கிட்ட குடு .ஐந்நூறு ரூபா தரேன். ”
” ஆமாடா..ஐந்நூறு ரூபா..பார்த்திருக்கியாகண்ணால? சீக்ரமாகொடு..நூறுரூவாசேர்த்துதரோம்.”
அவர்கள் இருவரும் பண பேரம் பேசும் போது அவர்கள் யார் என்பது மோகனுக்குத் தெரிந்து விட்டது.
யோசிப்பதுபோல நடித்தபடி மோகன்,தனது அரை டவுசர் பாக்கெட்டிலிருந்துசட்டென விசிலை எடுத்து மூன்று தடவை பெரிதாக ஊதினான். அந்த அனாதை ஆசிரமத்தில் சிறுவர்கள் எல்லாரிடமும் ஒரு விசில் இருக்கும் ஒருவருக்கு ஆபத்து என்றால் விசில் சத்தம் கேட்கும் அதை வைத்து அனைவரும் உதவிக்கு வருவார்கள்.
தோளில் இருந்த குழந்தை கூடவிசில் சத்தம் கேட்டுச் சிணுங்கியது.
அடுத்த நிமிடம் அருகில் இருந்த அனாதை ஆசிரமத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கையில் கழியுடன் கம்புடன் ஓடி வந்தனர்.
மோகன்தன்எதிரில்நின்ற இருவரையும் பார்த்து ஜாடை காட்டினான்.
அவ்வளவுதான் சிறுவர்கள் அவர்களை அடித்து நொறுக்கவும் இருவரும் பயந்து அலறிக்கொண்டு ஓடினர்.
மோகன் தோளிலே குழந்தையை அணைத்தபடி அனாதை ஆசிரமத்திற்குச் சென்றான்.
அவனைத் தொடர்ந்த சிறுவர்கள். ” ஹையா குட்டி பாப்பா வந்து இருக்கு !”என்று சந்தோஷமாகச் சிரித்தார்கள்.
147
