கி. பார்வதி/உயிரைக் காத்தவன்

வித்தைக் காட்டிப் பிழைக்கும் குடும்பம். நண்டும், சிண்டுமாக நான்கு குழந்தைகள்.
மூத்தவனுக்கு ஆறும், அடுத்த பெண்ணிற்கு நான்கும், மூன்றாவது பெண்ணிற்கு மூன்றும், நான்காவது பெண்ணுக்கு ஒன்றரை வயதும் இருக்கலாம்.
அம்மா மட்டுமே அவர்களுடன் இருந்தாள்.
கடைக்குட்டியை வைத்துக் கொண்டு, ரயிலில் ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டாள்.
மற்ற மூவரும் ஆளுக்கொரு இரும்பு வளையத்தை வைத்துக் கொண்டு, முதலில் கைகளை நுழைத்து, பின் கால்களை நுழைத்து, அதன் பின் முழு உடம்பையும் அதனுள் நுழைத்து வெளியே எடுத்தனர். உடம்பு ரப்பர் போல், இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொண்டிருந்தது. அவர்களைப் பார்த்து கடைக்குட்டி சரளாவும், கையைக் காலை அசைத்தாள்.
வித்தை முடிந்தவுடன் தட்டு ஏந்தினான் சரவணன்.
குழந்தைகளைப் பார்த்து எல்லோரும் மனம் இரங்கினர்.
அடுத்த ஸ்டேஷனில் இறங்கியவுடன், குழந்தைகள் ஓடியாடி விளையாட, அவர்கள் அம்மா ஓரிடத்தில் அமர்ந்து, காசை எண்ணிக் கொண்டிருந்தாள். ஸ்டேஷனுக்குள் ஒரு ரயில் சத்தத்துடன் நுழைய, அதன் சத்தத்தால் ஈர்க்கப்பட்டு சரளா குடுகுடு வென்று அதை நோக்கி ஓட, சற்று தூரத்திலிருந்து இதைப் பார்த்தவர்கள் பாப்பாவைத் தூக்குங்க என்று அலற, கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிச் சென்று, தங்கச்சிப்பாப்பாவை இழுத்து, நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் சரவணன்.
அவனை எல்லோரும் பாராட்டினர்.
(129)

One Comment on “கி. பார்வதி/உயிரைக் காத்தவன்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன