அன்புச்செல்வி சுப்புராஜூ/அண்ணனின் பாசம்

அந்தி நேரம். பத்து வயது அன்பு, தன் தம்பி அகிலனைத் தோளில் தூக்கிக்கொண்டு தெருவில் நடந்தான். அவர்களின் பெற்றோர் கூலி வேலைக்குச் சென்றிருந்ததால், தம்பியைப் பார்த்துக்கொள்வது அன்புவின் பொறுப்பாக இருந்தது.
அன்று அகிலனுக்குக் காய்ச்சல் வந்தது. தம்பியின் உடல் சூடாக இருப்பதை உணர்ந்த அன்பு பயந்தான். அம்மா வரும்வரை காத்திருக்காமல், தம்பியைத் தூக்கிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்குச் சென்றான்.
“தம்பிக்கு உடம்பு சரியில்லை, ஐயா! அவனைப் பாருங்க!” என்று மருத்துவரிடம் பதற்றத்துடன் கூறினான்.
அகிலனைப் பரிசோதித்த மருத்துவர், பயப்பட ஒன்றுமில்லை என்றார். அதைக் கேட்டதும் அன்புவுக்கு நிம்மதி ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் கண் விழித்த அகிலன், “அண்ணா!” என்று அழைத்தான்.
“ஒண்ணுமில்லைடா தம்பி! அண்ணா இருக்கேன். சீக்கிரம் சரியாயிடுவ!” என்று அவனை அணைத்துக்கொண்டான்.
அந்த வயதில் அன்புவும் மற்ற குழந்தைகளைப் போல விளையாட ஆசைப்படும் சிறுவன்தான். ஆனால், தம்பியின் மீது கொண்ட பாசத்தால் அவனைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான்.

100

One Comment on “அன்புச்செல்வி சுப்புராஜூ/அண்ணனின் பாசம்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன