வி.கே.லக்ஷ்மி நாராயணன்/நன்றிக் கடன்

முருகேசு மனைவியின் வயிற்றில்
உள்ள கட்டியின் அறுவைச் சிகிச்சை க்காக பணம் முப்பதாயிரம் தேவைப்
பட்டது. வீட்டில் சிறுக சிறுக பானைகளில் போட்டுச் சேகரித்து வைத்திருந்த
நோட்டுகளையும் சில்லறைகளையும் இரண்டு மஞ்சள் பைகளில் திணித்து
எடுத்துக் கொண்டு வேர்த்து விறு விறுக்க நடை போட்டான் முருகேசு.
பணம் எவ்வளவு சேர்ந்திருக்கிறது என்பது தெரியாது.
மருத்துவமனையை அடைந்து தான் கொண்டு வந்திருக்கும் பணப்பைகளை
மருத்தவரிடம் காட்ட அவருக்குத் தலை சுற்றியது.
அதே சமயம் எதேச்சையாக அங்கு வந்த புது மருத்துவர் நரேந்திரன்
முருகேசுவை பார்த்து, “ நீங்க அப்பாசாமியின் மகன்தானே?” என கேட்க
“ஆமா, எம் பேரு முருகேசு “ என்றான்.
அதன் பிறகு முருகேசு மருத்துவமனைக்கு வந்த நோக்கம் பற்றிக் கூறி, தான்
அறுவைச் சிகிச்சைக்காகக் கொண்டு வந்திருக்கும் பணப் பையைக் காண்பித்தான்.
“ முருகேசு உங்கப்பா என் படிப்புக்காக நிறைய உதவி பண்ணியிருக்கார்.
அந்த நன்றிக் கடனுக்காக நான் உங்க மனைவிக்கு இலவசமா ஆபரேஷன்
பண்றேன். நீங்க பணம் எதுவும் கட்ட வேணாம்.” எனக் கூறிவிட்டு
நரேந்திரன் அகன்றார்.
முருகேசு இரு கைகளையும் உயரே தூக்கி வணங்கினான்.

127

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன