
முற்றம் முழுதும்
உன்னை தேடும்
பட்டாம்பூச்சிகள்..
மணிப்புறாக்கள்
பக்,பக் ஒலி எழுப்பிய வண்ணம்…
கா…கா… கரைந்தே
போகும் காக்கைகள்…
சாளரம் வழியே
எட்டிப் பார்க்கும்
சூரியன்…
மலர முரண்டுப்பிடிக்கும்
மலர்கள்…
இரவெல்லாம் உறங்க மறுக்கும்
என் விழிகள்..
இத்தனைக்கும்
எப்படி சொல்வேன்
நீ
ஊருக்குப் போன
துக்க செய்தியை

சிறப்பான சொல்
கொண்டு
தொடுத்த மாலை (கவிதை)