
அப்பாவுக்கு ஹெர்னியா சர்ஜரி. “பளு தூக்கக்கூடாது” என்றார் டாக்டர்.
ஆனால் வீட்டின் பசி தூக்கச் சொன்னது. அவர் புடவை மூட்டையைத் தோளில் சுமந்தார், கையில் இன்னொரு பையைப் பிடித்தார். வீடு வீடாக நடந்தார். இது மகன் கண்ணனுக்குத் தெரியாது. அப்பா கடையில் கணக்கு பார்க்கிறார் என்று நினைத்தான்.
முதலாளி வீடுகளுக்கெல்லாம் புடவை டெலிவரி செய்யச் சொல்லிப் பணித்திருந்தார் போலும்.
அன்று கல்லூரி ரிசல்ட். நல்ல மதிப்பெண். ஓடி வந்தான் அப்பாவிடம் சொல்ல.
தெருமுனையில் பார்த்தான் – தந்தை வியர்வையில், புடவை மூட்டையுடன் தள்ளாடி நடப்பதை.
மதிப்பெண் ஷீட் கசங்கியது கையில். கண்ணீர் வழிந்தது.
அன்று சத்தியம் செய்தான்: “இனி உங்கள் சுமையை நான் இறக்குவேன், அப்பா.”
78
