முனைவர் என். பத்ரி/ வாரச்சந்தை

முனுசாமி ஒரு கிராமத்தில் வாழ்பவர்.
அவருக்கு மூன்று பெண்கள் மற்றும் மனைவி .ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டு அதில் தன்னுடைய குடும்பத்தை நடத்துபவர். பெட்டிக் கடைக்குத் தேவையான பொருட்களை அருகில் உள்ள நகரத்து வாரச்சந்தையில் தான் வாங்குவார். அந்த நகரத்திற்குப் பேருந்து கிடையாது. நடந்து தான் போக வேண்டும் .ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்த வாரச்சந்தைக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கி வருவார். இதோ இந்த ஞாயிற்றுக்கிழமையும் அந்த வாரச் சந்தைக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். இரண்டு பைகளில் பொருட்களைத் தோளிலும், இரு கைகளிலும் சுமந்து சுமந்து கொண்டு வருகிறார். உழைப்பின் அருமை உணர்ந்தவர் அவர்.
வீட்டு வாசலில் மகள்களும், மனைவியும் இவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வாரச்சந்தையில் வாங்குவதால் இவருக்கு நல்ல லாபம் கிடைக்கும். வாரச் சந்தை இவருக்கு ஒரு வரம் ஆகும்.

93

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன