பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்/சுமையா என்ன?

வேலன் சாதாரண விவசாயி. அவன் மனைவி வேலாயி அவனுக்கு உறுதுணையாக இருந்தாள். மகன் சரவணன் பிறந்தான். நாம் தான் கஷ்டப்படுகிறோமே நம் மகன் கஷ்டப்படவேண்டாம் என்று எண்ணி கிராமப்பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்ததும் அடுத்த பிளஸ் 2க்கு அருகிலுள்ள நகரத்தில் உள்ள பள்ளியில் சேர்த்தான். அந்த பள்ளி விடுதி வசதியுடன் கூடியது. மகனும் தந்தை சுமையை உணர்ந்து நன்கு படித்து பள்ளிக்கூடத்தில் முதல் மாணவன் மாவட்டத்திலும் முதல்.
தலைமை ஆசிரியரின் முயற்சியால் உதவித்தொகை மூலமாகக் கல்லூரி படிப்பு, படித்து முடித்ததும் கேம்பஸ் மூலமாக வேலை.
மகன் புதிதாகச் சேரும் வேலைக்குத் தேவையான பணம், பொருள்களுடன் வேலன் சென்றான். அம்மாதிரி செல்வது அவனுக்குச் சுமையல்ல.

75

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன