
ஒவ்வொரு முறையும் கந்தன் பக்கத்துக் கிராமத்தில் இருக்கும் சாவடிக்குச் சென்று வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு வருவான். பக்கத்துக் கிராமம் ஐந்து கிலோமீட்டர் தூரமாவது இருக்கும். இப்படி ஒவ்வொரு முறையும் அவன் வருவது அவன் மனைவி வள்ளிக்குப் பிடிக்காது.
அவன் வயது அதிகமாகி விட்டதால் அவன் வாங்கிக்கொண்டு இரண்டு பைகளில் சுமந்து வருவதை அவள் விரும்பவில்லை. ஆனால் யார் பேச்சையும் கேட்க மாட்டான் கந்தன்.
அவள் அண்ணனிடம் அவன் இதுமாதிரி நடந்து வருவதை வருத்தத்துடன் குறிப்பிட்டாள் வள்ளி.
அவள் அண்ணனுக்கு என்ன தோன்றியதோ ஒருநாள்
டூ வீலரில் வந்து வள்ளி வீட்டில் இறங்கினான்.
“என்னப்பா இது?” என்று கந்தன் கேட்டான்.
“உங்களுக்குத்தான் வாங்கினேன்”
“நான் பணம் தர முடியாதுப்பா?”
“வேண்டாம். கிப்டா கொடுக்கறேன். எங்காவது வெளியில் போனால் இதைப் பயன்படுத்துங்கள்,” என்றான் வள்ளி அண்ணன்.
வள்ளி அண்ணனை நன்றியுடன் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள்.
97
