உமா ஸ்வாமிநாதன்/ கமலியின் மௌனம்

மதிய வெயிலின் அமைதியில் போன் சிணுங்கியது. கமலி அந்த வாட்ஸ்அப் செய்தியைத் திறந்தாள். அதில் ஒரு ஓவியம் இருந்தது. அதைப் பார்த்தவுடனேயே அவளுடைய இதயம் ஒரு நொடி நின்றது. அதில் கமலி, வெண்ணிற மல்லிகைப் பூக்களைச் சூடிய கூந்தலுடன், தலைகுனிந்து, ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருப்பது போலச் சித்தரிக்கப்பட்டிருந்தாள்.
கமலிக்கு ஆறுதலாக, மஞ்சள் நிறச் சேலை அணிந்து, சிவப்பு நிறக் கைவளையல்கள் குலுங்க, அவளுடைய உயிர்த்தோழி கனிவுடன் அருகில் நின்றாள்.
ஆம், தோழி கனி அன்பும் அரவணைப்பும் நிறைந்தவள். எப்பொழுதும் புன்னகையுடன் உடனிருந்து உற்சாகம் ஊட்டுபவள். அவளது சொற்கள் மனதிற்கு நிம்மதியையும் ஆறுதலையும் தரும் மருந்தாக இருந்தன. கனியின் நட்பு வாழ்க்கைப் பாதையை எளிதாக்கியது.
தோழியின் தோளில் ஒரு பட்டாம்பூச்சி மெதுவாக அமர்ந்திருந்தது.
அந்தப் பட்டாம்பூச்சி கமலியின் மனதில் சிறகடித்த பல மௌனமான ஆசைகளையும், இதுவரை சொல்ல முடியாத ரகசியங்களையும் வெளிப்படுத்துவது போல இருந்தது. இருவரும் பேசாமல், ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து, ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் அந்தத் தருணம் மிகவும் அழகாக இருந்தது.
இது வெறும் ஓவியம் அல்ல; உலகிற்குத் தெரியாத, அவர்கள் இருவரும் பகிர்ந்துகொண்ட ரகசியத்தையும் அவர்களுக்கிடையிலான ஆழமான பிணைப்பையும் ஓவியன் தீட்டியிருந்தான்.
[13:28, 14/10/2026] Azhagiyasingar:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன