
இவர்கள் இருவரும் இருவேறு பெண்கள் அல்ல. ஒரே பெண்ணின் இரண்டு மனங்கள்.
மல்லிகைப்பூ பூ சூடியவள் நேற்றைய அவள். கட்டுப்பாட்டுடன், கண்ணீரை அடக்கி, ஊர் என்ன சொல்லுமோ என்ற பயத்துடன் வாழ்ந்தவள். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டவள்.
மஞ்சள் சேலைக்காரி அவளின் இன்று. பச்சை நிறமாக மாறியவள். இயற்கையோடு கலந்தவள். மூக்குத்தியும், வளையலும், தைரியமும் கொண்டு, தனக்காகப் பேசத் தொடங்கியவள்.
இத்தனை நாள் இருவரும் உள்ளுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இன்று தான் முதல் முறையாக ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை பார்க்க வந்த பட்டாம்பூச்சி தான் அவளது நாளை. துடிப்பானது.அது சொல்கிறது, நீங்கள் இருவரும் சேர்ந்தால் தான் நான் வருவேன் என்று. இப்போது அவள் முழுமையானவள்.
