
கலாவும் ,மாலாவும் சகோதரிகள். பார்த்தால் இரட்டையர்கள் என்று சொல்லலாம் .ஆடைகளாகட்டும் நகை ஆகட்டும்,இருவரும் ஒரே ஒரே வடிவமைப்பில் அணிவார்கள். இருவரும் படிப்பில் சுட்டி, ஆனால் கலா மருத்துவர் ஆனாள், மாலா அழகுக்கலை நிபுணர் ஆனாள்.
மூத்தவள் கலாவை மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வந்தனர். மாப்பிள்ளை வீட்டார் “பெண்ணை அழைச்சுட்டு வாங்கோ” என்றனர்.கலாவின் அம்மா “மாலா ,கலாவை கூட்டிட்டு வாடி ” என்றாள். கலா உள்ளே வர எல்லோர் முகத்திலும் எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி. மாப்பிள்ளை” நான் பெண்ணிடம் தனியாகப் பேச வேண்டும்”, என்றார். கலாவின் பெற்றோர் சம்மதித்தனர். மாப்பிள்ளை” கலாவிடம் ,மேடம் உங்களை எனக்குப் பிடித்து உள்ளது. ஆனால், நான் விரும்புவதோ மாலாவைத் தான். இருவரும் சில காலங்களாகக் காதல் கொண்டுள்ளோம். எனவே உங்கள் சம்மதத்தில் ,எங்கள் காதல் திருமணத்தை நடத்தி வையுங்கள் ” என்றார். அதிர்ந்து போன கலா சட்டென்று சுதாரித்து,” என் தங்கைக்காக எதையும் தருவேன்”. உங்கள் காதலுக்கு என் பச்சைக்கொடி.” என்றாள். இதை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த மாலாவுக்கும் ஆனந்தக் கண்ணீர். ஓடி வந்து அக்காவைக் கட்டிக் கொண்டாள்.
119
