
ஒரு கிராமத்தில் வசிக்கும் சாருவும் பாருவும் நெருங்கிய தோழிகள். ஊரில் நடக்கும் எல்லா விஷயங்களும் இவர்களுடைய காதுகளுக்கு வந்துவிடும். அதிலும் சாரு மற்றவர்கள் காதில் சொல்லும் ரகசியங்களைப் பாதுகாப்பதில் வல்லவள் என்று பெயர் பெற்றவள்.
ஒருநாள் பாரு, சாருவின் காதில் ஒரு ரகசியத்தைச் சொல்கிறாள். அதைக் கேட்ட சாரு அதிர்ச்சியில் உறைந்து போகிறாள். அடுத்த சில நிமிடங்களில், அந்த ரகசியம் ஊர் முழுவதும் பரவிவிடுகிறது!
பாரு கோபத்துடன் சாருவிடம். சண்டைக்கு வருகிறாள். ஆனால் சாரு , “நான் யாரிடமும் சொல்லவில்லை!” என்று சாதிக்கிறாள்.
அங்கே வந்த ஒரு சிறுமி, “நீங்க ரெண்டு பேரும் பேசினதை அந்தப் பட்டாம்பூச்சி கேட்டிருக்குமோ?” என்று கேட்கிறாள்.
அந்த ரகசியத்தை ஊருக்குப் பரப்பியது இவர்களில் யாருமே இல்லை. இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது அருகில் இருந்த மூன்றாவது பெண், தன் அலைப்பேசியில் தவறுதலாக இயங்கிக்கொண்டிருந்த ஒலிப்பதிவைத் தனது குடும்ப வாட்ஸ்அப் குழுவில் அனுப்பிவிட்டிருக்கிறாள்!
ரகசியம் காப்பதில் பெருமை பேசும் இருவரும், இனிமேல் பேசுவதற்கு முன் சுற்றிலும் யார் இருக்கிறார்கள் அலைப்பேசி வைத்து இருக்கிறார்களா பார்க்கத் தொடங்குகிறார்கள்!
“காதில் சொன்ன ரகசியத்தைக்கூடக் காப்பாற்றலாம்; ஆனால் அலைப்பேசி காதில் விழுந்துவிட்டால், கடவுளாலும் காப்பாற்ற முடியாது!”
128
