லீலா ராமசாமி /நட்பின் ஓவியம்

மீனாவும் கவிதாவும் உயிர்த் தோழிகள். ஒருத்தி இல்லாமல் மற்றொருத்திக்கு வேலையே ஓடாது. எங்குச் சென்றாலும் இருவரும் சேர்ந்தே செல்வார்கள்.
அவர்கள் இருக்கும் அதே தெருவில்தான் அருண் இருந்தான்.
சொல்லி வைத்தாற்போல் இருவருக்கும் அருண் மீது காதல் ஏற்பட்டது.
ஒரு பூங்காவில் தோழிகள் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரு பட்டாம்பூச்சி மீனாவின் கையில் வந்தமர்ந்தது.
“பட்டாம்பூச்சியே! என்னவர் உன்னிடம் அவருடைய காதலைச் சொல்லி அனுப்பினாரா?” என்று கேட்டபோதுதான் மீனாவும் அருணைக் காதலிக்கிறாள் என்றே கவிதாவுக்குத் தெரிந்தது.
ஒருநாள் அருண் தான் கவிதாவைத் திருமணம் செய்ய விரும்புவதாக கவிதாவிடம் கூறினான்.
“சாரி! நான் உங்களைக் காதலிக்கவில்லை. மீனாதான் உங்களைக் காதலிக்கிறாள்” என்று அருணை நிராகரித்துவிட்டு ஊரைவிட்டே சென்றுவிட்டாள் கவிதா. மீனா கவிதாவைக் காணாமல் தவித்தாள்.
மூன்றாண்டுகளுக்குப் பிறகு, ஓர் ஓவியக் கண்காட்சிக்கு மீனா தன் கணவன் அருணுடன் வந்திருந்தாள்.
அங்கே மீனாவும் கவிதாவும் இருக்கும் ஓர் ஓவியம் இருந்தது. அதில் மீனாவின் கையிலமர்ந்த பட்டாம்பூச்சியிடம் மீனா பேசுவது போல அமைந்திருந்தது.
அந்த ஓவியத்தின் மூலையில் வரைந்தவரின் பெயர் கவிதா என்றிருந்தது.
உயிர்த்தோழிக்காக கவிதா தன் காதலைத் தியாகம் செய்தது இறுதிவரை மீனாவுக்குத் தெரியாது.
(வார்த்தைகளின் எண்ணிக்கை 128)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன