பி. ஆர்.கிரிஜா/ரமாவின் திட்டம்

உமா, ரமாவிற்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கின உடனேயே, இருவரும் ஒரே குரலில்” நாங்க, எங்கள மாதிரி ரெட்டையர்களத்தான் கட்டுவோம். அப்படி கிடைக்காட்டி , அண்ணன், தம்பிகள் ஓகே” என்றனர்.
முத்துசாமியும் வள்ளியும், இது என்னடா வம்பாப் போச்சு, இதுகளுக்கு கல்யாணம் ஆன மாதிரிதான், என்று அலுத்துக் கொண்டனர்.
உமா ரமாவிடம், ” ஏய் , இது சரிப்பட்டு வருமா? நீ பாட்டுக்கு சொல்லிப்பிட்ட?”
” வருண்டி, நான் ஏற்கனவே என் ஆஃபீசில ஒருத்தர் கிட்டச் சொல்லி வெச்சிருக்கேன். அவரும் , அவர் கசின்ஸ் இரட்டையர் இருக்காங்கன்னு சொல்லியிருக்காரு. நீ கவலப்படாத” என்றாள் உமா.
உமாவின் பாஸ் முத்துசாமிக்கு ஃபோன் போட்டு இந்த இரட்டையர் வரன் பற்றிச் சொன்னார். அடுத்த நாளே அவர்களைப் பெண் (கள்) கேட்க அழைத்து வருவதாகச் சொன்னார்.
முத்துசாமிக்கு நம்ப முடியவில்லை. “இது என்ன சினிமா
கனக்க நடக்குது “, வள்ளியிடம் சொல்லி மாய்ந்து போனார்.
அடுத்த நாள் ரமேஷ், தினேஷ் என்ற இரட்டையர்களையும், அவர்களது பெற்றோர்களையும் கூட்டிக் கொண்டு ரமாவின் பாஸ் வந்தார். முத்துசாமிக்கு மயக்கம் வராத குறை. வந்தவர்கள் யாருமில்லை, முத்துசாமியின் பள்ளித் தோழன் ஆறுமுகம். இருவரும் மகிழ்ச்சியில் ஆரத் தழுவிக் கொண்டனர்.
ரமா, ரமேஷ், உமா, தினேஷ் திருமணம் ஜாம் ஜாமென்று நடந்தேறியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன