
அவர்கள் இருவரும் சந்திக்காத நாளே இல்லை. எதைப் பற்றித்தான் பேசுவது என்று தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள்.
வசந்தியும் ஜெயந்தியும் ஒரே வயதுடையவர்கள் என்றாலும், ஜெயந்தியைவிட வசந்தி கொஞ்சம் குண்டாக இருப்பாள்.
இரண்டு பேருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறார்கள். இருவருக்குமே திருமணம் பிடிக்கவில்லை. அன்று மாலை பூங்காவில் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு பட்டாம்பூச்சி வசந்தியின் கையில் வந்து மொய்த்தது.
“என்ன சொல்றே நீ?” என்று கேட்டாள் வசந்தி.
பட்டாம்பூச்சி சொன்னது: “நீங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்குங்க.”
