சுந்தர மணிவண்ணன்/அவள் தேர்வு

“என்னடி சொல்றே?”
தினமும் அம்மா எழுப்பும் கேள்வி…
“எனக்குத் தெரியும் மா. நீ கொஞ்சம் சும்மா இருக்கிறியா?”
அம்மாவின் நச்சரிப்பைத் தாங்க முடியாமல் அவள் எரிந்து விழுந்தாள்.
“எப்ப கேட்டாலும் சும்மா இருன்னு பொறுப்பில்லாமல் பதில் சொல்ற. எனக்குன்னு ஒரு பொறுப்பிருக்கு. காலத்தில கல்யாணம் பண்ணி, ஒருத்தன் கிட்ட உன்னை ஒப்படைக்கிறது என் கடமை இல்லையா?”
அம்மாவின் குரலில் அழுத்தம் கூடியது.
“நான் இன்னும் கொஞ்சம் செட்டில் ஆகணும். அதுவரை பொறுத்துக்கோ.”
அவளுடைய பதில் அம்மாவுக்கு எரிச்சலைத் தந்தது.
“நல்லாப் படிக்க வச்சோம். கை நிறையச் சம்பளம் வாங்கறே. இன்னும் என்னடி செட்டில் ஆகணும்?”
அம்மா ஆவேசமானாள்.
“அது மட்டும் போதாது மா.”
“அப்ப வேற என்னதான் வேணுங்கிற?”
“அதையாவது சொல்லித் தொலையேன்!”
அம்மாவின் பொறுமை கரைந்தது. அவளும் சொல்ல நினைத்ததைச் சொன்னாள்.
“சொல்றேன், கேளு. இந்தக் கல்யாணம், குழந்தைன்னு ஒரு சுழற்சிக்குள்ள என்னை அடைச்சுக்க விரும்பல. அனாதைக் குழந்தைகளைப் பராமரிக்கிற ஆசிரமத்தில சேர்ந்து, ஒரு துறவியா வாழப் போறேன். அந்தக் குழந்தைகளுக்குத் தாயாக இருக்கப் போறேன்.”
அம்மா அதிர்ச்சியில் அவளையே பார்த்தாள்.
“அப்போ… உனக்குக் கல்யாணமே வேண்டாமா?”
அவள் தலையசைத்தாள்.
அம்மா அவளுடைய கைகளைப் பற்றிக்கொண்டாள்.
அம்மாவுடன் அந்த வண்ணத்துப்பூச்சியும் கேட்டது:
“எப்போ போகப் போறே?”

132

One Comment on “சுந்தர மணிவண்ணன்/அவள் தேர்வு”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன