முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/ஆனந்தக் கண்ணீர்

சீனிவாசனும் அபிராமியும் அண்ணன், தம்பிகளுக்குப் பிறந்த ஒன்றுவிட்ட உறவினர்கள். சீனிவாசன் ஒரு வாரம் முன்னதாகப் பிறந்ததால் அண்ணனானான். இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தார்கள்.

சீனு எப்போதும் அபியை வம்பிழுப்பான். ஒருமுறை அவளுக்குச் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுப்பதாகச் சொல்லி, அவளைக் கீழே விழ வைத்துவிட்டான்.

காலம் மாறியது. படிப்பில் ஆர்வம் இல்லாமல் பிளஸ் டூவுடன் படிப்பை நிறுத்திய அபியின் அழகைப் பார்த்து, ஒரு பணக்காரரின் மகன் அவளைத் திருமணம் செய்துகொண்டான்.

சீனு படிப்பைத் தொடர்ந்து, பக்கத்து நகரக் கல்லூரியில் சேர்ந்து நிறைய அரியர் வைத்தான். கெட்ட பழக்கங்கள் அவனைப் பற்றிக்கொண்டன. வேலைக்குச் செல்லாமல் இருந்ததால், அவனைப் பற்றிய கவலையிலேயே பெற்றோர் இறந்துபோனார்கள்.

ஒருமுறை ஊருக்கு வந்த அபி, தன்னுடைய விலை உயர்ந்த காரில் வந்து வீட்டு வாசலில் இறங்கினாள். அப்போது, தன் பழைய சைக்கிளைத் தள்ளிக்கொண்டு, பாகப்பிரிவினையில் தனக்குக் கிடைத்த பக்கத்துப் போர்ஷனிலிருந்து வந்த சீனுவைப் பார்த்து அழுதாள்.

அவன் தீய பழக்கங்களையெல்லாம் கைவிட வேண்டும் என்றும், தங்கள் நிறுவனத்திலேயே அவனுக்கு வேலை வாங்கித் தருவதாகவும் அபி கூறினாள். அதைக் கேட்ட சீனுவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன