கேள்விக்காரன்/தேவா என்றொரு

தேவா என்றொரு
பிரபல சாதாரணன்
சாதாரணங்களில்
சங்கீத
அசாதரணன்

பேச்சுக்கு பக்கத்து
வீட்டுக்காரன்
உறவுக்கு
உற்றதொரு
பாரதியின் கண்ணன்

ரஜினிகாந்துக்கும்
நேற்றைய புது முகத்திற்கும்
ஹிரோ யார்
எனக் கேட்காது
தன் இசையை
ஹிரோவாக
நிர்மாணிப்பவன்

தேவா யாரென்று
காசிமேடுக்காரனும்
கற்றறிந்த
கர்நாடக சங்கீத
வித்வானும்
ஓரலையில் பேசுவர்
அவர் குணத்தால்
இனியரென்று

இனியென்ன
சுரங்கள்
டியூன்கள்
மெட்டுக்கள்
உபத்திரவம்
ஏதுமின்றி
உறக்க ராகம்
மட்டும்
உறுதுணயிருக்க
சுக உறக்கம் கொள்
எங்கள்
இசைப்பாரி!

…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன