சுந்தர மணிவண்ணன்/வாழ்க்கை ஓவியம்

    அந்தப் படத்தைக் காட்டினாள். அசந்துபோனேன்.
    “நான் ஒன்றும் தெரியாத சின்னப் பெண் அல்ல!”
    அவள் சொன்னதில் அர்த்தம் இருந்தது. வாழ்க்கையின் மேடு பள்ளங்களைக் கடந்து வந்தவள். எல்லாம் முடிந்துவிட்டதாக அவள் நினைக்கவில்லை.
    இன்னும் கடக்க வேண்டியவை நிறையவே இருக்கின்றன. மிதிவண்டிச் சக்கரம்போல வாழ்க்கையும் மேலும் கீழுமாகச் செல்லும்.
    பேசிக்கொண்டிருந்தவள் பழைய நினைவுகளில் மூழ்கினாள்.
    அப்பா ஆசையோடு வாங்கி வந்த சைக்கிள். அதைக் கற்றுக்கொள்ளும்போது வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைப் பற்றி அவள் அறிந்திருக்கவில்லை.
    பெடலை மிதிப்பதும் பிரேக்கைப் பிடிப்பதும் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. தடுமாறினாள். மீண்டும் முயன்றாள். தொடர்ச்சியான பயிற்சியால் சைக்கிள் ஓட்டப் பழகிவிட்டாள்.
    வாழ்க்கையும் அப்படித்தான். தடுமாற்றங்கள், வெற்றி தோல்விகள் எனப் பலவற்றைக் கடந்து இன்று நிமிர்ந்து நிற்கிறாள்.
    மீண்டும் அந்தப் பழைய படத்தைப் பார்த்தாள்.
    ஒரு சிறுமி தட்டித் தடுமாறிச் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தாள்.
    “ஆஹா! என்ன அற்புதமான படம்!”
    இது கிமி தந்த படம் அல்ல.
    அந்த ஓவியத்திற்கு உயிரூட்டியிருந்தது அவளுடைய கைவண்ணம்.
    அன்று தன் சிறு கரத்தால் அவள் தீட்டிய ஓவியம் அது.
    பெருமிதத்தில் அவள் முகம் மலர்ந்தது.

    மறுமொழி இடவும்

    உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன