சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/தன்னம்பிக்கைச் சக்கரம்

செல்லாவுக்குச் சைக்கிள் ஓட்ட ஆசை. ஆனால், ஓட்டத் தெரியாது. கற்றுக்கொடுக்க யாரும் இல்லை. வருத்தப்பட்டாள் செல்லா.
செல்லாவுக்கு அப்பா கிடையாது. உடன்பிறந்தவர்களும் கிடையாது. அம்மா நோய்வாய்ப்பட்டவள்.
தினமும் சென்று வாடகைக்குச் சைக்கிள் எடுத்து வந்து, அதில் தானாகவே பழகிக்கொள்வாள். பலமுறை விழுந்து அடிபட்டு எழுந்து, தானாகவே வருத்தப்பட்டுக்கொள்வாள்.
ஒருவழியாகப் பிரமாதமாக ஓட்டத் தொடங்கிவிட்டாள்.
ஒருமுறை, சங்கிலித் திருடன் ஒருவனைச் சைக்கிளில் துரத்திப் பிடித்து, பாராட்டையும் பெற்றாள்.
அவளுடைய பள்ளிப் படிப்பும் முடிவடைந்தது. கல்லூரிக்குச் செல்ல வசதியும் கிடையாது.
அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருந்த நேரத்தில், யாரோ, “போலீஸ் வேலைக்கு விண்ணப்பம் போடு” என்றபோது, பளிச்சென்று ஓர் யோசனை தோன்றியது.
பெண்களைப் பாதுகாக்கும் வேலையைவிட, சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டதால் கிடைத்த அபாரமான தன்னம்பிக்கையையும், யாரையும் சாராமல் இருக்கும் தைரியத்தையும் மற்ற பெண்களுக்கும் கற்றுக்கொடுப்பது இன்னும் சிறப்பு என்று தீர்மானித்தாள்.
“இங்கு மகளிருக்கு மட்டும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளும், இருசக்கர வாகனம் ஓட்டவும் கற்றுக்கொடுக்கப்படும்” என்ற பலகையை மாட்டினாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன