செல்லம் சேகர்/சாதுர்யம்

திலகா படிப்பில் சுட்டி. பெற்றோரிடம் அளவற்ற பாசம் கொண்டவள். குடிகாரத் தந்தையிடம்கூட, தன் தேவைகளைக் கேட்டுப் பெறுவதில் சாமர்த்தியமாக நடந்துகொள்வாள். “உங்களால் எப்போது முடியுமோ, அப்போது வாங்கித் தாங்கப்பா!” என்பாள்.
திலகாவின் அம்மா ஜெயம் நர்சிங் படித்தவள். கணவர் மூர்த்தி ஒரு எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டர். ஆனால், குடிகாரர். ஒரே மகளின் எதிர்காலத்திற்காக, மைதிலி என்பவரின் வீட்டில் கேர்டேக்கராக வேலை செய்துகொண்டிருக்கிறாள்.
அன்று திலகாவின் பிறந்தநாள். மகள் கேட்ட சைக்கிளை வாங்க முடியவில்லையே என்ற கவலையுடன் வேலைக்குச் சென்றாள் ஜெயம்.
எஜமானி வீட்டில் பாட்டி, “உன் மகளுக்குப் பிறந்தநாள் என்றாயே! நம் வீட்டிலிருந்து இனிப்பு, காரம் எல்லாம் செய்து எடுத்துக்கொண்டு போய்க் கொண்டாடு!” என்றார்.
அப்போது உள்ளே வந்த மைதிலி, “ஸ்வீட், காரம், கேக் எல்லாம் வாங்கிக்கொண்டு வந்திருக்கேன். எடுத்துக்கொண்டு போய் உன் பெண்ணுக்கு நான் தந்தேன்னு சொல்லு!” என்று கூறி இன்ப அதிர்ச்சி தந்தாள்.
வீட்டருகே வந்த ஜெயம், திலகா புதிய சைக்கிளை ஓட்டுவதைக் கண்டு வியந்தாள்.
உள்ளே, கணவர் மூர்த்தி முருகன் படத்தின் முன் நின்றிருந்தார்.
“ஜெயம்! புதிய காண்ட்ராக்ட் கிடைத்துள்ளது. இனி குடிக்க மாட்டேன் என்று முருகன் மீது சத்தியம் செய்தேன். வந்த முன்பணத்தில் சைக்கிள் வாங்கினேன்!” என்றார்.
மகளுக்குச் சைக்கிள் கிடைத்ததைவிட, கணவர் திருந்தியதே ஜெயத்திற்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அன்பால் மாற்றலாம்; அதுவே உண்மையான சாதுர்யம்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன