ருக்மணி வெங்கட்ராமன்/ஓவியம் தந்த கொடை

“இங்கே பாருடி! எவ்வளவு அழகாக வரைந்திருக்கிறார்! அப்படியே அம்மன் நேரில் வந்து உட்கார்ந்திருப்பது போல் இருக்கிறது.”
“ஆமாம். சாலையை அழகாகப் பெருக்கிவிட்டு, வண்ணச் சாக்பீஸ்களை வைத்து இவ்வளவு அழகாக வரைந்திருக்கிறார். யார் வரைந்தது என்று தெரியவில்லை!”
“ஏன், அவர் திறமையை யாரும் அங்கீகரிக்கவில்லை?”
“தெரியவில்லை. தச்சூர் சின்ன ஊர். அவரைப் பற்றி வெளியே தெரிய வாய்ப்பில்லை. நாம் மயிலம் கோவிலுக்குப் போகும் வழியில் தற்செயலாகப் பார்த்தோம்.”
அவர்கள் ஓவியத்தைப் படம் பிடித்துக்கொண்டனர்.
அப்போது அங்கு வந்த ஒருவர், “இதை வரைந்தவரைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.
“இல்லை.”
“அதோ, அங்கே சக்கரங்கள் பொருத்தப்பட்ட பலகையில் உட்கார்ந்து, தள்ளிக்கொண்டே போகிறாரே, அவர்தான்.”
அவர்கள் வேகமாக அவரிடம் சென்று பாராட்டினர். அருகில் சென்றபோதுதான் அவர் பேச முடியாதவர் என்பது தெரிந்தது. அவருடைய அனுமதியைப் பெற்று, தங்கள் செல்போன்களில் படங்களைப் பிடித்துக்கொண்டனர்.
அடுத்த நாள், தங்கள் முகநூல் சுவர்களில் அந்த ஓவியத்தை வரைந்த ஓவியரைப் பற்றிய தகவல்களுடன் படத்தைப் பதிவிட்டனர். பலரும் பாராட்டினர். ஒரு விளம்பர நிறுவனம் அவரது திறமையை அங்கீகரித்து, அவருக்கு வேலை வழங்கியது.
தேவியின் அருளால் ஓவியரின் வாழ்க்கை உயர்ந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன