எல்.ரகோத்தமண்/சிங்கப் பெண்

ரயில் மெல்ல நகர்ந்தது!
உறவும் உடன் நகர்ந்தது!

தன்னிச்சையாய்
வலக்கை உயர்ந்தசைய
உள்ளத்தில் அசைந்தது பேருவகை!

ஜன்னல் கம்பியில்
கன்னம் புதைத்து பேசிய
பாரவை ரயிலின் வேகத்தில்
தூரத்தில் கரைந்தது !

வெளிவராத வார்த்தைகள்
தொண்டைக் குழியில் உருண்டு
தவித்தன!

மனதின் அறைகளில்
ஏதோ ஒரு சோகம்!
சோகத்தில் ஒளிந்திருந்தது
ஒரு வீரியம்!

வீரியத்தின் விதையாய்
லேசாய் பனித்தன கண்கள்!

ஆம்
என் மகள் – சிங்கப் பெண்
நாட்டை காக்கச் செல்கிறாள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன